டெல்லியில் பெய்த பலத்த மழையால் 4 விமானங்கள் ரத்து 11 விமானம் தாமதம்

சென்னை: டெல்லியில் பெய்த பலத்த மழை காரணமாக 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன் 11 விமானங்கள் தாமதமானது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு நேற்று மாலை 3.10 மணிக்கு செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மாலை 5.15 மணிக்கு செல்ல வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம், இதைபோல் டெல்லியிலிருந்து மாலை 4 மணிக்கு சென்னை வரவேண்டிய விஸ்தாரா ஏா்லைன்ஸ் விமானம், நள்ளிரவு 12.15 மணிக்கு வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 4 விமானங்கள் டெல்லியில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. அதோடு டெல்லியிலிருந்து சென்னை வரும் 5 விமானங்களும், சென்னையிலிருந்து டெல்லி செல்லும் 6 விமானங்களும் மொத்தம் 11 விமானங்கள் சுமார் 3 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன. இதுபற்றி சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு முறையான அறிவிப்புகள் எதுவும் செய்யவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

Related Stories: