×

இந்தியா, பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது

ஜாகார்த்தா: இந்தோனேசியாவில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி 1-1 என்ற கணக்கில் ட்ரா-வில் முடிந்தது. இந்தியா -பாக்  இடையே நடைபெற்ற பரபரப்பான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் முதல் கோல் தமிழக வீரர் கார்த்தி அடித்தார். பிரேந்தர் லக்ரா தலைமையிலான இந்திய அணியில் தமிழக வீரர் கார்த்தி முதல் கோல் அடித்து அசத்தினார்.

இந்த கோல் அடித்ததன் மூலம் தமிழக வீரர் கார்த்திக்கு இது சிறப்பான அறிமுக ஆட்டமாக அமைந்துள்ளது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் வாய்ப்புகளை உருவாக்கினாலும் இரண்டாவது காலிறுதியில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. தமிழக வீரர் செல்வம் கார்த்தியின் ஆரம்ப கோலினால் இந்தியா ஒரு கோலுக்கு பூஜ்ஜியமாக முன்னிலை வகித்தது.

நான்காவது காலிறுதியில் பாகிஸ்தான் சிறந்த முயற்சியில் ஈடுபட்டது. காலிறுதி ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் பாகிஸ்தான் அணி பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோல் அடித்து சமநிலை பெற்றது. இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் ஆட்டம் ட்ரா-வில் முடிந்தது.

இந்தியா அடுத்ததாக மே 24 அன்று ஜப்பானை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் அணி மே 24 அன்று புரவலன் இந்தோனேசியாவை எதிர்கொள்கிறது.


Tags : Asian Cup ,India ,Pakistan , The Asian Cup hockey match between India and Pakistan ended in a 1-1 draw
× RELATED சில்லிபாயின்ட்…