மகளிர் டி.20 சேலஞ்ச் இன்று தொடக்கம்: மந்தனா-கவுர் அணிகள் மோதல்

புனே: பிசிசிஐ சார்பில் ஐபிஎல் தொடரை போன்று மகளிர் டி.20 சேலஞ்ச் தொடர் நடத்தப்படுகிறது. இதில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான டிரையல் பிளாசர்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர்நோவாஸ், தீப்தி ஷர்மா தலைமையிலான வெலோசிட்டி அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடம் பிடிக்கும் அணி பைனலுக்கு தகுதி பெறும். புனேவில் நடைபெற உள்ள இந்த தொடரில் இன்றைய முதல்போட்டியில் டிரையல்பிளாசர்ஸ் -சூப்பர் நோவாஸ் மோதுகின்றன. இறுதிபோட்டி 28ம்தேதி நடைபெறுகிறது. ஆடவர் ஐபிஎல் போன்று ஆடும் லெவனில் 4 வெளிநாட்டு வீராங்கனைகள் இடம்பெறலாம். 3 அணிகளிலும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீசை சேர்ந்த முன்னணி வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories: