திருப்போரூர் திமுக சார்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம்: அமைச்சர், எம்பி பங்கேற்பு

திருப்போரூர்: திருப்போரூர் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் நேற்றிரவு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருப்போரூர் ஒன்றியக்குழுத் தலைவரும் வடக்கு ஒன்றிய செயலாளருமான எஸ்ஆர்எல்.இதயவர்மன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர், ஒன்றியக்குழு துணை தலைவர் சத்யா சேகர், மாவட்டத் துணை செயலாளர்கள் அன்புசெழியன், விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்போரூர் பேரூராட்சி தலைவரும், பேரூர் செயலாளருமான மு.தேவராஜ் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று பேசுகையில், கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி கஜானாவை மொத்தமாக சுரண்டி, காலியாக வைத்துவிட்டு சென்றது. நிதியாதாரம் பூஜ்ய நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று கொரோனா பேரழிவை கட்டுப்படுத்தியது. இந்த நெருக்கடி நேரத்தில் சொன்ன வாக்குறுதியில் பலவற்றை நிறைவேற்றினோம். மீதமுள்ளவற்றை விரைவில் நிறைவேற்றுவோம். தமிழக முதல்வர் 20 மணி நேரத்துக்குமேல் உழைத்து, எங்களுக்கு வழிகாட்டியாக விளங்கி வருகிறார்.

இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இக்கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ வீ.தமிழ்மணி, ஒன்றிய நிர்வாகிகள் விஜயகுமார், வாசுதேவன், ெகஜராஜன், அருள்தாஸ், கருணாகரன், சேகர், ராஜாராம், பேரூராட்சி துணை தலைவர் பரசுராமன், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரும் பேரூர் செயலாளருமான டி.யுவராஜ், வீ.சந்திரன், தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எல்லப்பன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: