திருத்தணியில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

திருத்தணி: திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருத்தணி கமலா திரையரங்கம் அருகே நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி தலைமை வகித்தார். நகர பொறுப்பாளர் வினோத்குமார் வரவேற்று பேசினார். ஒன்றிய செயலாளர்கள் ஆர்த்தி ரவி, என்கே.கிருஷ்ணன், சிஜே.சீனிவாசன் முன்னிலை வகித்தனர். இதில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது;

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பட்டியல் இனத்து மக்கள் உரிமைக்காக போராடுகின்ற கட்சிதான் திமுக. எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என்ற குறிக்கோள்தான் திராவிட மாடல். முதல்வர்களில் 88 சதவீதம் பெற்று மு.க.ஸ்டாலின் முதலிடத்தில் உள்ளார். இந்தியாவில் நம்பர் 1 முதல்வராக தேர்வு செய்யப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி அல்ல, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் வரவேண்டும் அதுதான் எனது குறிக்கோள் அதுதான் எனது மகிழ்ச்சி என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.தற்போது அதிமுகவில் பொறுப்பில் உள்ளவர்கள் மட்டுமே இருந்து வருகின்றனர். தொண்டர்கள் யாரும் இல்லாத கட்சியாக மாறிவிட்டது. எனவே அதிமுகவினர் அனைவரும் திமுகவில் இணைந்து விடுங்கள். கலைஞர் 18 அடி பாய்ந்தால் மு.க.ஸ்டாலின் 16 அடி பாய்ந்து திறம்பட செயலாற்றி வருகிறார்.இவ்வாறு அமைச்சர் பேசினார். 7வது வட்ட செயலாளர் கே.பாபு நன்றி கூறினார்.

திருவள்ளூரிலும் கூட்டம்: திருவள்ளூர் நகர திமுக சார்பில், திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ரயில் நிலையம் அருகில் மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளரும் நகர மன்ற துணைத் தலைவருமான சி.சு.ரவிச்சந்திரன் வரவேற்றார். அவைத் தலைவர் தே.தேவன், நகரமன்ற தலைவர்  பா.உதயமலர் பாண்டியன், நகர நிர்வாகிகள் கோவி.மனோகரன், ராஜேஷ்வரி கைலாசம், இ.குப்பன், வே.ரமேஷ்பாபு, ஜெ.சங்கர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், இலக்கிய அணி இணைச் செயலாளர் வி.பி.கலைராஜன், தலைமை பேச்சாளர் மார்ஷல் ஆகியோர் கலந்துகொண்டு திமுக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி பேசினர். மாநில, மாவட்ட நிர்வாகிகள் கே.திராவிடபக்தன், ஆர்.டி.இ.ஆதிசேசன், எஸ்.கே.ஆதாம், சரஸ்வதி சந்திரசேகர், ப.சிட்டிபாபு,  கே.யு.சிவசங்கரி, எம்.பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் கூளுர் எம்.ராஜேந்திரன், மோ.ரமேஷ்,  எஸ்.மகாலிங்கம், டி.கிறிஸ்டி, கே.அரிகிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளர்கள் டி.கே.பாபு, தி.ஆ.கமலக்கண்ணன், சி.சு.விஜயகுமார், நகர இளைஞரணி அமைப்பாளர் அ.பவளவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ப.நந்தகுமார் நன்றி கூறினார்.

Related Stories: