ஹெல்மெட் அணியாதவர்களிடமிருந்து போலீசார் அபராதம் வசூல்: சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் சோதனை,

சென்னை: இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் நபரும் ஹெல்மெட் அணிவது இன்று முதல் கட்டாயம் ஆக்கப்பட்ட நிலையில் விதிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் இருந்து போலீசார் அபராதம் வசூலித்து வருகின்றனர், சாலை விபத்துகளில் உயிர் இழப்பை குறைக்க நம்மைக்காக்கும் 48 என்ற பெயரில் இலவச சிகிச்சை திட்டத்தில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரகூடிய நிலையில் அதே நோக்கத்துடன் சென்னை மாநகர காவல் துறை இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் அமர்த்து செல்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற அறிவிப்பை வெளியிட்டது.

இன்று முதல் அந்த நடைமுறை அமலுக்கு வந்த நிலையில் சென்னையில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் மேல்கொண்ட போக்குவரத்துக்கு போலீசார் இருசக்கர வாகனத்தியில் பின்னால் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் பயனிப்பவர்களிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர், ஒரு சிலர் தலையில் அடிபட்ட காரணத்தால் ஹெல்மெட் போடாமல் வந்ததாக தெரிவித்ததை அடுத்து, அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.    

Related Stories: