கந்தர்வகோட்டை யாதவர் தெருவில் மின் கம்பியில் மண்டி கிடக்கும் செடி கொடிகள்-நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை யாதவர் தெருவில் இருநூறு குடும்பங்களுக்கு மேல் குடியிருந்து வருகிறார்கள்.இந்த தெருவில் உள்ள மின் கம்பத்தில் மின்விளக்கு எரிந்த வண்ணம் உள்ளது. மின் கம்பத்தை சுற்றிலும் கருவேல மரங்களும்,செடி,கொடிகளும் வளர்ந்து மின் கம்பத்தில் ஏறி மின் கம்பிகளில் மண்டி கிடக்கின்றன. தற்சமயம் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் யாதவர் தெருவில் உள்ள மின் பாதையில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின்சார துறையினர் இந்த மின் மரத்தில் அருகில் உள்ள கருவேல மரங்களை வெட்டியும், புல், பூண்டுகளை அகற்றியும் இனிவருங்காலங்களில் இந்த பகுதியில் மின்தடை ஏற்படாமல் சரிசெய்து கொடுக்க வேண்டுமென இப்பகுதியை சேர்ந்த மக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

Related Stories: