எங்களை பலாத்காரம் செய்வதை நிறுத்து... மேலாடையின்றி ஆர்ப்பாட்டத்தில் குதித்த இளம்பெண் :கேன்ஸ் திரைப்பட விழாவில் பரபரப்பு

கேன்ஸ் : கேன்ஸ் திரைப்பட விழாவில் பாரீசை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மேலாடையின்றி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்புக் கம்பளத்தின் மீது, திடீரென 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தனது மேலாடையின்றி நுழைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். ஜார்ஜ் மில்லரின் திரைப்படத்தின் காட்சிக்கு முன்னதாகவே, அந்தப் பெண் தனது ஆடைகளைக் கிழித்து எறிந்துவிட்டு சிவப்புக் கம்பளத்தின் அரங்கிற்குள் நுழைந்தார். அவளது நெஞ்சில் உக்ரைனின் தேசிய நிறங்கள் வரையப்பட்டிருந்தன. மேலும், அதில் ‘எங்களை பலாத்காரம் செய்வதை நிறுத்து’ என்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன. ரத்தத்தைப் பிரதிபலிக்கும் அவரது உடல் முழுவதும் சிவப்பு வர்ணம் தெறிக்கப்பட்டிருந்தது. திடீரென அந்தப் பெண் நுழைந்ததால், அங்கிருந்த பாதுகாவலர்கள் அந்தப் பெண்ணை சுற்றி வளைத்து மடக்கினர். அதனை அங்கிருந்த புகைப்படக்காரர்கள் போட்டோ எடுத்தனர்.

விசாரணையில், மேலாடையின்றி நுழைந்த பெண் யார்? என்பது குறித்து பகிரங்கமாக போலீசார் அறிவிக்கவில்லை. இருந்தும், அவர் பிரெஞ்சு பெண்ணியக் குழுவின் உறுப்பினர் என்பது தெரியவந்தது. மேலும், அவரது கீழ் முதுகில் பிரெஞ்சு பெண்ணியக் குழுவின் பெயர் எழுதப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அந்த குழு வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘ரஷ்யப் போரால் உக்ரேனியப் பெண்கள் மீது இழைக்கப்பட்டு வரும் பாலியல் வன்முறையைக் கண்டிப்பதற்காக, பாரீசை சேர்ந்த எங்களது பெண் உறுப்பினர் மேலாடையின்றி ஆர்ப்பாட்டம் நடத்தினார்’ என்று கூறியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷ்ய படையினரால் இதுவரை 400க்கும் மேற்பட்ட உக்ரைன் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதாக ‘தி ஐரிஷ் டைம்ஸ்’ என்ற நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: