திருவாரூரில் கோயில் குளத்தில் குளிக்கச் சென்றபோது விபத்து: 2-ம் நாளாக ஆட்டோ ஓட்டுநரை தேடும் பணி தீவிரம்

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் கமலாலயக் குளத்தில் குளிக்கும்போது மாயமான ஆட்டோ ஓட்டுநரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் கமலாலயக் குளத்தில் நேற்று மாலை 3 மணி குளிக்கச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேசன் தண்ணீருக்குள் மூழ்கி மாயமானார். அதேபோன்று, குளத்தின் கீழ்கரையில் குளித்துக் கொண்டிருந்த ராஜஸ்தானை சேர்ந்த 12 வயது சிறுமி முஸ்கான் என்பவர் தண்ணீரில் மூழ்கினார். இதையடுத்து இருவரையும் தேடும் பணியில் தீயணைப்புத்துறை வீரர்கள் ஈடுபட்டனர்.

சிறுமி முஸ்கானின் சடலம் மீட்கப்பட்டு, உடற்கூறு ஆய்வுக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போதிய வெளிச்சம் இல்லாததால், நேற்று இரவு ஆட்டோ ஓட்டுநரை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 6 மணி முதல்  10-க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறை வீரர்கள் கமலாலயக் குளத்தில் சிறிய படகு மூலம் ஆட்டோ ஓட்டுநரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: