×

பூலாங்குறிச்சியில் மஞ்சுவிரட்டு காளைகள் முட்டி 30 பேர் காயம்

திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே பூலாங்குறிச்சி கிராமத்தில் நடந்த மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் 30 பேர் காயமடைந்தனர்.சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே பூலாங்குறிச்சி கிராமத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 300 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.

வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்ட காளைகளை, வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதில் காளைகளை அடக்க முயன்ற 30 பேர் காயமடைந்தனர்.
மாடுகளை பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் அண்டா, சைக்கிள், டைனிங் டேபிள், அரிசி, பீரோ உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. காயமடைந்தவர்களுக்கு அருகில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags : Poolankurichi , Thiruputhur: Thirty persons were injured in a cow collision at Poolankurichi village near Thiruputhur. Sivagangai district, Tiruputhur
× RELATED பூலாங்குறிச்சி காவல்நிலையம் முன்...