இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..இரவு நேரத்தில் பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு..!!

இத்தாலி: இத்தாலியில் உள்ள எட்னா எரிமலை வெடித்து நெருப்பு குழம்பை வெளியிட்டு வருகின்றது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 3 பெரிய எரிமலைகளில் ஒன்றான எட்னா, இத்தாலி நாட்டில் உள்ள சிசிலி பகுதியில் அமைந்துள்ளது. கடந்த காலங்களில் இந்த எரிமலை பலமுறை வெடித்துள்ளது. கடந்த மாத இறுதியில் கரும்புகையை வெளியிட்டு வந்த எட்னாவில் தற்போது சீற்றம் உச்சத்தை அடைந்துள்ளது. எரிமலையின் முகப்பு பகுதியில் இருந்து லாவா எனப்படும் நெருப்பு குழம்பும், சாம்பலும் வெளியாகி வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில நாட்களுக்கு முன்பு எரிமலை சுற்றுவட்டாரங்களில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது இரவு நேரங்களில் எரிமலையில் இருந்து லாவா நெருப்பு குழம்பாக பாய்வதை தூரத்தில் இருந்தபடி சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். எட்னா எரிமலை எடுத்த சில நாட்களுக்கு எரிமலை குழம்பை வெளியிடும் என்று தெரிவிக்கும் இத்தாலி நிலவியல் அதிகாரிகள், எரிமலை சீற்றத்தை 24 மணி நேரமும் நிபுணர்கள் கண்காணித்து வருவதாக கூறியுள்ளனர். 

Related Stories: