சினிமா பாடகி சங்கீதா சஜித் மரணம்

திருவனந்தபுரம்: தமிழ், மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் பாடிய பிரபல பாடகி சங்கீதா சஜித் திருவனந்தபுரத்தில் உடல்நலக்குறைவால் நேற்று மரணமடைந்தார். தமிழில் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானவர் சங்கீதா சஜித். பின்னர் இவர் மிஸ்டர் ரோமியோ உட்பட ஏராளமான தமிழ், மலையாள படங்களில் பாடியுள்ளார். 46 வயதான சங்கீதா கடந்த சில வருடங்களாக சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்தார். அவரை அவரது தங்கை பராமரித்து வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சங்கீதா சஜித் நேற்று அதிகாலை மரணமடைந்தார். சங்கீதாவின் மரணத்திற்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Related Stories: