×

இன்று முதல் ஜகர்தாவில் ஆசிய கோப்பை ஹாக்கி தொடக்கம்

ஜகர்த்தா: நடப்பு சாம்பியன் இந்தியா உட்பட 8 நாடுகள் பங்கேற்கும் 11வது ஆசிய கோப்பை ஹாக்கிப்போட்டி ஜகர்தாவில் இன்று தொடங்குகிறது. ஆசிய நாடுகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் இன்று முதல் ஜூன் ஒண்ணாம் தேதி வரை நடைபெற  உள்ளது. இந்தப்போட்டியில் மார்ச் 30ம் தேதி வரை, தர வரிசையில் ஆசிய கண்டம் அளவில் முதல் 8 இடங்களை பிடித்த  நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, கொரியா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.

இந்த 8 நாடுகளும் தலா 4அணிகள் கொண்ட ஏ, பி என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றின் முடிவில் இந்த 2 பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் தலா 2 அணிகள் சூப்பர்-4 பிரிவுக்கு முன்னேறும். அதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை விளையாடும். அந்த சுற்றின் முடிவில் முதல் 2 இடங்கள் பிடிக்கும் அணிகள் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும். கடைசி 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 3,4வது இடங்களுக்கான ஆட்டத்தில் விளையாடும்.

லீக் சுற்று ஆட்டங்கள் இன்று முதல் மே 26ம் தேதி வரை நடைபெறும். சூப்பர்-4 ஆட்டங்கள் மே29, 30 தேதிகளில் நடக்கும். இறுதி ஆட்டம் ஜூன் 9ம் தேதி நடக்கும். உலக தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள 2 ஆசிய நாடுகளான இந்தியா 3வது இடத்திலும், மலேசியா 10வது இடத்திலும் உள்ளன. கடந்த 2017ம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் மலேசியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திதான் இந்தியா ஆசிய கோப்பையை வென்றது. அதனால் இந்த முறையும்  இந்தியா எளிதில் வென்று கோப்பை தக்க வைத்துக் கொள்ளும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

* தமிழர்கள்
இந்திய ஒன்றிய அணியில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக வீரர்கள் கார்த்திக் செல்வம்(அரியலூர்), மாரீஸ்வரன் சக்திவேல்(கோவில்பட்டி) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்திய அணியில் மட்டுமின்றி மலேசிய அணியிலும் அதிரன் ஆல்பர்ட் என்று தமிழக வம்சாவளி வீரர் ஆட இருக்கிறார். கூடவே அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் அருள் அந்தோணி, இந்தோனேசியாவின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் தர்மராஜ்( முகமது அப்துல்லா) ஆகியோரும் மலேசியத் தமிழர்கள்.

* புதுமுகம் அதிகம்
கேப்டன் ரூபிந்தர்பால் சிங் தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள உள்ள 20 வீரர்களில் 12 பேர் முதல்முறையாக சர்வதேச போட்டியில் களம் காண உள்ளனர். அவர்களில் 2 பேர்  தமிழக வீரர்கள். ஜூன் 12ல் தொடங்கும் புரோ ஹாக்கித் தொடரில் விளையாட செல்லும் இந்திய அணியில் முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

Tags : Asian Cup of Hockey ,Jakarta , The Asian Cup of Hockey kicks off in Jakarta today
× RELATED இந்தோனேசியாவில் தெற்கு சுமத்ரா...