பெட்ரோல், டீசல் விலை குறைப்பு இந்தியாவுக்கு இம்ரான் மீண்டும் பாராட்டு மழை

இஸ்லாமாபாத்: இந்தியாவில்பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.8 எனவும், டீசலுக்கு லிட்டருக்கு ரூ.6 எனவும் ஒன்றிய அரசு குறைத்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனது டிவிட்டரில், இந்திய அரசின் பெட்ரோல், டீசல் மீதான விலைக் குறைப்புக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அத்துடன் தெற்கு ஆசியா குறியீட்டு எண் அறிக்கையை டேக் செய்துள்ளார். அதில், ‘குவாட் நாட்டில் உறுப்பினராக இருந்த போதிலும், அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் தள்ளுபடி விலையில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்தது. இது போன்றதொரு சுதந்திரமான வெளியுறவு கொள்கையை தான் தனது தலைமையிலான அரசு மேற்கொள்ள இருந்தது. ஆனால், அதற்குள்ளாக ஆட்சி மாற்றத்துக்காக வெளிநாட்டின் அழுத்தத்திற்கு உட்பட்டு காட்டி கொடுக்கப்பட்டது. ,’ என்று கூறியுள்ளார். இம்ரான் கான் இதற்கு முன்பு, `இந்தியா மிகவும் மதிப்புக்குரிய நாடு’, என்றும் உக்ரைன் போரில் ரஷ்யா மீதான இந்தியாவின் நிலைப்பாடு மக்கள் நலன் சார்ந்தது என்று இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவு கொள்கையை பாராட்டினார்.

Related Stories: