கொட்டும் மழையில் தோடர் பழங்குடியின கிராமத்திற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; பாரம்பரிய நடனமாடி அசத்தினார்

ஊட்டி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊட்டி அருகேயுள்ள சூட்டிங்மட்டம் (பகல்கோடு மந்து) பகுதிக்கு கொட்டும் மழைய பொருட்படுத்தாது சென்று தோடர் இன மக்களை சந்தித்து உரையாடினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 19ம் தேதி நீலகிரி மாவட்டம் ஊட்டி வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், இன்று காலை ஊட்டி அருகேயுள்ள சூட்டிங் மட்டம் (பகல்கோடு மந்து) தோடர் பழங்குடி மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு கொட்டும் மழையை பொருட்படுத்தாது சென்றார். அங்கு கூடியிருந்த தோடர் பழங்குடியின மக்கள் பாரம்பரிய முறைப்படி எம்ராய்டரி சால்ைவ அணிவித்து முதல்வரை வரவேற்றனர்.

தொடர்ந்து அவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அங்குள்ள தோடர் பழங்குடியின மக்களின் கிராமத்திற்கு சென்று பார்வையிட்டார்.  தோடர் எருமைகளின் இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டார். தொடர்ந்து பகல்கோடுமந்து சமுதாய கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் தோடர் பழங்குடியின கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும், கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களை அதிகரித்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பகல்கோடு மந்து கிராமத்துக்கு செல்லும் சாலையை தொகுதி எம்பி ஆ.ராசாவின் தொகுதி மேம்பாட்டு நிதியில் சீரமைத்து தரப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் இருந்து பல்வேறு பணிகளுக்காக ஊட்டி வரும் பழங்குடியினர் மற்றும் பொதுமக்கள் தங்கு செல்ல வசதியாக ஊட்டியில் தங்கும் விடுதி கட்டித் தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு, இது குறித்து பரிசீலிக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து தோடர் பழங்குடியின ஆண்கள் மற்றும் பெண்கள் நடமாடினர். அவர்களுடன் சேர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடனமாடினார். பின், தோடர் பழங்குடியின மக்கள் இசை கருவிகளை முதல்வரிடம் வாசித்து காண்பித்தனர். மேலும் தோடர் இன மக்கள் முதல்வருடன் செல்பி எடுத்து மகிழந்தனர்.

Related Stories: