கொல்கத்தாவில் நாளை மறுதினம் முதல் குவாலிபயர்; குஜராத்-ராஜஸ்தான் பலப்பரீட்சை

மும்பை:15வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, புனே நகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்று ஆடிய 10 அணிகளில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நாளை மறுதினம் (24ம்தேதி) நடைபெறும் முதல் குவாலிபயர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிபோட்டிக்கு முன்னேறும்.

25ம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் தோற்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும். 27-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் குவாலிபயர் 2வது போட்டியில் முதல் குவாலிபயரில் தோல்வி அடைந்த அணியும், எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற அணியும் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறும்.29ம் தேதி நடைபெறும் இறுதிச்சுற்றில் முதல் குவாலிபயரில் வென்ற அணியும், 2வது குவாலிபயரில் வென்ற அணியும் மோதுகின்றன.

Related Stories: