சுகாதாரத்துறை ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை சைதாப்பேட்டை பொது மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; சுகாதாரத்துறை ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 6 மாத மகப்பேறு விடுப்பின் மூலம் 40,000 பெண்கள் பயனடைவர். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணிபுரியும் 4,848 செவிலியர் ஊதியம் ரூ.14,000-ல் இருந்து ரூ.18,000ஆக உயர்த்தப்படுகிறது. 2,448 சுகாதார பணியாளர்களுக்கும் ரூ.11,000ல் இருந்து ரூ.14,000ஆக ஊதியம் உயர்த்தப்படுகிறது.

5,971 பேருக்கு ரூ.32 கோடி செலவில் ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் குரங்கு அம்மை போன்ற நோய் பரவல் இல்லை. ஹெல்த் கேர் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.3 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும். தேசிய னால வாழ்வு குழுவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 30% ஊதிய உயர்வு வழங்கப்படும். மாணவி சிந்துவுக்கு சிறப்பான சுகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓமந்தூதாரர் பல்நோக்கு மருத்துவமனையில் குத்துச்சண்டை வீரர் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு புணர்வாழ்வு மையம் அமைக்கப்படும்.

29 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவம் துவங்கப்படும். தமிழகத்தில் பல் மற்றும் வாய் சுகாதார சேவையை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.

Related Stories: