நீடாமங்கலம் அருகில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி: மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகில் வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகளை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி ஆய்வு செய்தார். காவிரி டெல்டா பாசன சிறப்பு தூர்வாரும் பணிகளில் வெண்ணாறு வடிநிலக் கோட்டம் தஞ்சாவூர் சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 38 பணிகள் 337.50 கி.மீ தொலைவிற்கு 394.26 லட்சங்கள் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. அப்பணிகளை திருச்சி மன்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, தஞ்சாவூர் கீழ் காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக வெண்ணாறு வடிநிலக்கோட்டம் தஞ்சாவூர் சார்ந்த நீடாமங்கலம் பகுதிகளில் சாமந்தன் காவிரி வடிகால், கொண்டியார் பாசன வாய்க்கால், மன்னப்பன், பரப்பனாமேடு, கடம்பூர், வீரவநல்லூர் வாய்க்கால்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பணிகளை தரமாக விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். ஆய்வின்போது வெண்ணாறு வடிநிலக்கோட்டம் தஞ்சாவூர் செயற்பொறியாளர் மதனசுதாகரன், உதவி செயற்பொறியாளர் கனகரெத்தினம், உதவிப்பொறியாளர் தியாகேசன் மற்றும் முன்னோடி விவசாயிகள் உடனிருந்தனர்.

Related Stories: