ஆழியார் அணையில் ஒன்றிய ரிசர்வ் படை கல்லூரி வீரர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சி

ஆனைமலை: கோவை அருகே உள்ள தொப்பம்பட்டி ஒன்றிய  ரிசர்வ் படை பயிற்சி கல்லூரியில் உள்ள வீரர்களுக்கு ஆழியார் அணையில் பேரிடர் மீட்பு பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால், நேற்று ஒன்றிய ரிசர்வ் படை பயிற்சி கல்லூரியின் ஐஜி வர்மா உத்தரவின் பேரில், கமாண்டோ ராஜேஷ்குமார், துணை கமாண்டோ ஹரிகுமார், ஆகியோர் தலைமையில், 80 மீட்பு படை வீரர்களுக்கு ஆழியார் அணையில் பயிற்சி மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி நடை பெற்றது.

பயிற்சியின்போது, பேரிடர் காலத்தில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், சம்பவ இடத்தில் கிடைக்கும் பொருட்களை கொண்டு எவ்வாறு மீட்பு பணிகளை மேற்கொள்வது என்பது குறித்தும், நீரில் மூழ்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்தும், பயிற்சி மற்றும் வீரர்களுக்கு ஒத்திகை நிகழ்ச்சி செய்து காண்பிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் மீட்புப் படை ஆய்வாளர் சுனில் மற்றும் பிரபு ஆகியோர் தலைமையில் 8 பேர் கொண்ட அதிகாரி பயிற்சி அளித்தனர்.

Related Stories: