சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் லாரிகள் நிறுத்துவதால் விபத்து ஏற்படும் அபாயம்: அதிகாரிகள் நடவடிக்கைக்கு கோரிக்கை

நாட்றம்பள்ளி: நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வழியாக அமைந்துள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தினசரி பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இந்த தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் நடந்து மற்றும் வாகனங்களில் சாலையை கடக்கும் பொழுது அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் வெலக்கல்நத்தம், ஆத்தூர் குப்பம், சுண்ணாம்பு குட்டை மற்றும் பல இடங்களில் சாலை ஓரங்களில் ஆங்காங்கே லாரிகளை டிரைவர்கள் நிறுத்திவிட்டு சாப்பிட அல்லது தூங்குவதற்காக சென்றுவிடுகின்றனர்.

இதனால் வாகனத்தில் வரும் பொதுமக்கள் எதிர்பாராதவிதமாக நின்றிருக்கும் லாரிகள் மீது மோதி விபத்துக்கு உள்ளாகி வருகின்றன. இதை தடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: