×

உயர்த்தியதில் இருந்து 50% குறைத்துவிட்டு மாநிலங்களை குறைக்கச் சொல்வதா?.. ஒன்றிய அரசுக்கு தமிழக நிதியமைச்சர் கேள்வி

சென்னை: வரியை உயர்த்திய போது மாநில அரசுகளுக்கு தெரிவிக்காத மத்திய அரசு, குறைக்கும் போது மாநில அரசுகளை அறிவுறுத்துவது தான் கூட்டாட்சி தத்துவமா? என தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எந்த மாநிலத்தின் கருத்தையும் கேட்காமல் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு கடுமையாக உயர்த்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

2014ம் ஆண்டு முதல் பெட்ரோல் மீதான வரியை 250 சதவிகிதம் அதாவது 23 ரூபாயும், டீசல் மீதான வரியை 900 சதவிகிதம் அதாவது 29 ரூபாயும் ஒன்றிய அரசு உயர்த்தியதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், தற்போது, வெறும் 50 சதவிகிதம் மட்டும் வரியை குறைத்துவிட்டு மாநிலங்களை குறைக்கச் சொல்லி வலியுறுத்துவதுதான் கூட்டாட்சியா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : Tamil Nadu ,Finance Minister ,Union Government , Is it to reduce the states by 50% from the increase? .. The question of the Finance Minister of Tamil Nadu to the Union Government
× RELATED தமிழ்நாட்டில் நிக்க சொன்னாங்க, ஆனா…...