×

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் ஒருவருக்கு புதிய வகை ஒமிக்ரான் பிஏ-4 வைரஸ்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை:  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று கிண்டி கிங் இன்ஸ்ட்டியூட் வளாகத்தில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் துறை   செயலாளர் ராதாகிருஷ்ணன்மற்றும் அதிகாரிகள்பங்கேற்றனர். பின்னார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் உள்ள ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு புதிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒருவருக்கு புதிய வகை வைரஸ் பிஏ-4 வகையான வைரஸ் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டிருக்கிறது. அவர் தற்போது நலமாக பாதுகாப்பாக இருக்கிறார். அவரோடு தொடர்புடையவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஒரே நேரத்தில் ஆயிரம் பணிமாறுதல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் மருத்துவக் கல்வி இயக்குநரத்திற்கு உட்பட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. வெள்ளிக்கிழமை பொதுசுகாதாரம், நோய்த்தடுப்பு மருந்துதுறை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை நிர்வாகத்தின்கீழ் கலந்தாய்வு நடத்தப்படவிருக்கிறது. மருத்துவ வரலாற்றில் ஒரே நேரத்தில் ஆயிரம் பேருக்கு பணியிட மாறுதல் நடைபெறுவது இதுவே முதல்முறை. கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், சமுதாய சுகாதார செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் 10 ஆயிரம் பேருக்கு வெளிப்படைத்தன்மை வாய்ந்த கலந்தாய்வு ஜூன் முதல் வாரத்தில் தொடங்கி நடைபெற உள்ளது.


Tags : Nawalur, Chengalpattu ,Minister ,Ma. Subramanian , New type of Omigron PA-4 virus in a person in Nawalur, Chengalpattu district: Minister Ma Subramanian
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...