பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மழைநீர் கால்வாய் சீரமைப்பு பணி: நகர்மன்ற தலைவர் ஆய்வு

பூந்தமல்லி: பருவமழை தொடங்குவதற்குள் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. பூந்தமல்லி பைபாஸ் சாலை, புதுத்தெரு உள்ளிட்ட 21 வார்டுகளிலும் பல்வேறு இடங்களில் கட்டப்படும் மழைநீர் கால்வாய் பணிகள் மற்றும் கால்வாய் தூர்வாறும் பணிகளை நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘பைபாஸ் சாலையில் உள்ள கால்வாய் அடைப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் சரிசெய்யப்பட்டது. பருவமழை தொடங்குவதற்குள் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மழைநீர் கால்வாய்களும் தூர்வாரப்படும். தெருக்களில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார். இதில் பூந்தமல்லி நகர்மன்ற துணை தலைவர் ஸ்ரீதரன், ஆணையர் நாராயணன், பொறியாளர் நடராஜன், மேற்பார்வையாளர் ரவி, சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன், நகர செயலாளர் ஜி.ஆர்.திருமலை, மாவட்ட பிரதிநிதி சுதாகர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், நகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: