வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவ விழா அத்தி வரதர் குளத்தில் பெருமாள் புனித நீராடினார்

காஞ்சிபுரம்: உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவ விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவையொட்டி தங்கச் சப்பரம், சிம்மவாகனம், ஹம்ச வாகனம், சூரிய பிரபை, பிரசித்தி பெற்ற கருடசேவை உற்சவம், சேஷ வாகனம், சந்திரபிரபை, தங்க பல்லாக்கு, யாழி வாகனம், தங்க சப்பரம், யானை வாகனம், போன்ற பல்வேறு கோணங்களில் காலை மாலை என இருவேளைகளும் பெருமாள் அலங்கரிக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அந்தவகையில் மிகவும் பிரசித்திபெற்ற தேர்த்திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதையொட்டி 20ம் தேதி தொட்டி திருமஞ்சனம், குதிரை வாகனம்,போன்ற வாகனங்களில் பெருமாள் அலங்கரிக்கப்பட்டு வீதி வலம் வந்தார். நேற்று21ம் தேதி காலை தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் பெருமாள் அலங்கரிக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்தி வரதர் வைபவம் நடைபெறும் திருக்கோலத்தில் வரதராஐ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் தீர்த்தவாரி புனித நீராடினார்.அப்போது குளத்தின் நான்கு புறங்களிலும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளின் தீர்த்தவாரி உற்சவத்தை கண்டு மகிழ்ந்து வழிபட்டனர். இதைத்தொடர்ந்து இரவு புண்ணியகோட்டி விமானத்தில் பெருமாள் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Related Stories: