×

ஆஸ்திரேலியா தேர்தலில் லிபரல் கட்சி தோல்வி: பிரதமர் பதவியை இழக்கிறார் மோரிசன்

கான்பெரா: ஆஸ்திரேலியா பொதுத்தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தோற்றார். ஆஸ்திரேலியாவில் பொதுத்தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் லிபரல் கட்சி தலைவரும், பிரதமருமான ஸ்காட் மோரிசனுக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தலைவர் அந்தோனி ஆல்பனிஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது. மொத்தமுள்ள 151 எம்பி இடங்களில் லிபரல் கட்சி கூட்டணி 52 இடங்களையும், தொழிலாளர் கட்சி 72 இடங்களையும் கைப்பற்றி உள்ளன. வெற்றிப் பெற 76 இடங்கள் தேவை என்ற நிலையில், 72 இடங்களை தொழிலாளர் கட்சி கைப்பற்றியதன் முலம், அல்பானிஸ் புதிய பிரதமராக பொறுப்பேற்பது உறுதியாகியுள்ளது. தனது தோல்வியை ஸ்காட் மோரிசன் ஒப்பு கொண்டுள்ளார்.


Tags : Liberal Party ,Morrison , Liberal Party loses Australian election: Morrison loses PM post
× RELATED கனடா தேர்தல்: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ...