×

கடலூர் தேவனாம்பட்டினம் சுனாமி நகரில் குப்பைகள் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் திடீர் முற்றுகை: அதிகாரிகள், போலீசாரிடம் வாக்குவாதம்

கடலூர்: கடலூர் தேவனாம்பட்டினம் சுனாமி நகரில் குப்பைகள் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.   கடலூர் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்சி செய்ய கடலூர் அருகே உள்ள வெள்ளப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதுவரை குப்பைகளை கொட்டுவதற்கு கடலூர் தேவனாம்பட்டினம் சுனாமிநகர் அருகே உள்ள, ஒரு இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் தேர்வு செய்து, அந்த இடத்தை சுத்தம் செய்து வைத்திருந்தனர்.

 இந்நிலையில் இன்று காலை அங்கு குப்பைகளை கொட்ட, மாநகராட்சி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் லாரியை தடுத்து நிறுத்தி, இங்கு குப்பைகளை கொட்ட கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி நகர்நல அலுவலர் அரவிந்த்ஜோதி, நகரமைப்பு ஆய்வாளர் அருள்செல்வன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதையடுத்து பொதுமக்கள் அவர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் கூறும்போது, எங்கள் அனுமதி இல்லாமல் நீங்கள் எப்படி இந்த இடத்தை தேர்வு செய்தீர்கள்.

எனவே இனி குப்பைகளை கொட்ட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறினர். இதையடுத்து கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல், பொதுமக்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Cuddalore ,Devanampattinam Tsunami ,City , Cuddalore, rubbish dump, protest, public outcry, siege
× RELATED வரதட்சணை கொடுமை வழக்கில்...