×

கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.110

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து இன்று காலை குறைவான தக்காளிகள் வந்துள்ளதால் அதன் விலை உச்சம் தொட்டுள்ளது. தினசரி 90 வாகனங்களில் 1, 200 டன் தக்காளிகள் வரும் நிலையில், மழை மற்றும் வரத்து குறைவால் இன்று காலை 38 வாகனங்களில் இருந்து 500டன் தக்காளிகள் வந்துள்ளதால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

நேற்று முன்தினம் ஒரு கிலோ நாட்டு தக்காளி 60க்கும் பெங்களூரூ தக்காளி 70க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை ஒரு கிலோ நாட்டு தக்காளி 100க்கும் பெங்களூரூ தக்காளி 110க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை புறநகரில் உள்ள சில்லறை கடைகளில் ஒரு கிலோ  நாட்டு தக்காளி 110க்கும் பெங்களூரூ தக்காளி 130க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட் காய்கறி  வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறுகையில், ‘’மழை மற்றும் வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்துள்ளது. இதனால் வியாபாரிகள் கடும் வேதனையில் உள்ளனர். இந்த விலை உயர்வு நீடிக்கும்’ என்றார்.

Tags : Coimbade Market , Coimbatore Market, Tomatoes, Rs
× RELATED டாக்டரின் மருந்து சீட் இல்லாமல்...