×

28ம் தேதி சிறப்பு பொதுக்குழு கூடுகிறது.. பாமக தலைவராக அன்புமணி தேர்வாகிறார்? ; ஜி.கே.மணிக்கு வேறு பதவி வழங்க திட்டம்


சென்னைசென்னையில் வருகிற 28ம் தேதி பாமக சிறப்பு பொதுக்குழு கூடுகிறது. இதில் பாமக தலைவராக அன்புமணி நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் ஜி.கே.மணிக்கு வேறு பதவி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.பாமகவின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் வருகிற 28ம் தேதி(சனிக்கிழமை) காலை 11 மணியளவில் சென்னையை அடுத்த திருவேற்காட்டில் நடக்கிறது. கூட்டத்திற்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை வகிக்கிறார். பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன்,  பொருளாளர் திலகபாமா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பா.ம.க. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், பாட்டாளி மக்கள் கட்சியின் பல்வேறு அணிகளின் அனைத்து நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அது மட்டுமல்லாமல் சார்பு அமைப்புகளான வ.ச., ச.மு.ச. ஆகியவற்றின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளும் இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் கட்சித் தலைவராக  ஜி.கே.மணி கடந்த 25 ஆண்டுகளாக இருந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் சட்டப்பேரவை பாமக தலைவராகவும் உள்ளார்.

இந்த நிலையில் கட்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில் கட்சித் தலைவராக அன்புமணியைக் கொண்டுவர பாமகவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பு சிறப்பு பொதுக்குழுவில் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அன்புமணி ராமதாசுக்கு தலைவர் பதவி வழங்கும் பட்சத்தில், ஜி.கே.மணிக்கு வேறு முக்கியப் பொறுப்பு  வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்வைத்தே அன்புமணி ராமதாஸ்க்கு மாநில தலைவர் பதவி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அன்புமணிக்கு தலைவர் பதவி வழங்கப்பட தான் இந்த சிறப்பு பொதுக்குழுவே கூடுவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் வருகிற 24ம் தேதி ஜி.கே.மணி தலைவராக பதவி ஏற்று 25 ஆண்டகள் நிறைவடைந்ததையொட்டி அவருக்கு சென்னையில் பாராட்டு விழாவும் நடத்தப்படுகிறது.

Tags : Pambaka ,Anmani ,G. K. , General Committee, Bamaka, Anbumani
× RELATED ஸ்ரீபெரும்புதூர் தமாகா வேட்பாளரை...