நெல்லை அருகே அட்டகாச குரங்குகள் கூண்டில் சிக்கின

நெல்லை: களக்காடு அருகே அட்டகாசம் செய்து வந்த குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். களக்காடு அருகே உள்ள மலையடிபுதூரில் சமீபகாலமாக குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து  வந்தது. வீடுகளுக்குள் புகும் குரங்குகள் உணவு வகைகளை சூறையாடியதுடன்  பொருட்களையும் உடைத்தெறிந்தன. வீட்டு தோட்டங்களில் வளர்க்கப்படும் செடி,  கொடி, மரங்களையும் முறித்து போட்டதுடன் பொதுமக்களையும் விரட்டியடித்தது. எனவே அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்  என்று கிராம மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து திருக்குறுங்குடி வனத்துறையினர் மலையடிபுதூரில் கூண்டு வைத்து குர்ங்குகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். கூண்டுக்குள் பழம் மற்றும் உணவு பொருட்களை  வைத்து கண்காணித்தனர். இதில் 2 குட்டிகள் உள்பட 5 குரங்குகள் சிக்கின. கூட்டில் பிடிபட்ட அட்டகாச குரங்குகளை மணிமுத்தாறு மலையில் கொண்டு விட  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து அப்பகுதியில் குரங்கு  பிடிக்கும் பணி தொடரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் ‘பொதுமக்கள் குரங்குகளுக்கு உணவளிப்பதை தவிர்க்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டனர்.

Related Stories: