×

மேட்டூர் அணை நீர்மட்டம் 115.35 அடியை எட்டியது: முன்கூட்டியே பாசனத்திற்கு நீர் திறக்க வாய்ப்பு..!

சேலம்: காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் 115.35 அடியை எட்டியது. காவிரி நீர்ப்பிடிப்பு மற்றும் மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 112.77 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 115.35அடியாக உள்ளது.
அணையின் நீர்மட்டம்: 115.35 அடியாக உள்ளது. நீர் இருப்பு: 86.24 டிஎம்சி, நீர்வரத்து: 46353 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சுமார் 3 அடி உயர்ந்துள்ளதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று காலை முதல் அணைக்கு 46.353 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரி நீர்வரத்து தற்போதைய நிலையே தொடர்ந்தால் இம்மாத இறுதிக்குள் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டினால் வழக்கமாக திறக்கப்படும் ஜூன் 12க்கு முன்பாகவே பாசனத்திற்கு நீர் திறக்க வாய்ப்பு உள்ளது. சுமார் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மே மாதத்தில் 46,353 கன அடி வரை நீர்வரத்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : Mattur dam , Mettur Dam water level reaches 115.35 feet: Opportunity to open water for irrigation in advance ..!
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...