சேலம்: காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் 115.35 அடியை எட்டியது. காவிரி நீர்ப்பிடிப்பு மற்றும் மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 112.77 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 115.35அடியாக உள்ளது.
அணையின் நீர்மட்டம்: 115.35 அடியாக உள்ளது. நீர் இருப்பு: 86.24 டிஎம்சி, நீர்வரத்து: 46353 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சுமார் 3 அடி உயர்ந்துள்ளதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.