×

பெரியபாளையம் எம்ஜிஆர் நகரில் ரூ.12.74 லட்சத்தில் சிமெண்ட் சாலை

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியில் புதிய சிமென்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது. எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் ஊராட்சி எம்ஜிஆர் நகர் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறது. இப்பகுதியில் உள்ள சிமென்ட் கான்கிரீட் சாலை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சாலை போடப்பட்டது. இச்சாலை, தற்போது பழுதடைந்து சிமென்ட் கான்கிரீட் பெயர்ந்து குண்டும் குழியுமாக சாலை மாறியுள்ளது.

மேலும், மழைக்காலம் வந்துவிட்டால் மழை தண்ணீர் வெளியே செல்ல வழி இல்லாத காரணத்தினால் மழைநீர் தேங்கி குளம்போல் தேங்கி காட்சியளிக்கும். இந்த பகுதியில் ஒரு வடிகால் கால்வாய் இல்லாததால் மழைநீர் குடியிருப்புக்குள் உள்ளே செல்லும் அவல நிலை ஏற்பட்டிருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு ஊராட்சி நிர்வாகத்திற்கும் மனு கொடுத்தும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக அரசின் துரித நடவடிக்கையால், இச்சாலையை தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் ரூ.12.74 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமென்ட் கான்கிரீட் சாலை மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை திமுக மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் கோகிலா, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சீனிவாசன் ஆகியோர் பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தனர். இதில், திமுக நிர்வாகிகள் சந்திரசேகர், சீனிவாசன், ராஜா, மூர்த்தி, சம்பத், ஹேமகுமார், மணி, சங்கர், பாஸ்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Tags : Periyapalayam MGR , Periyapalayam, MGR Nagar, Cement Road
× RELATED பெரியபாளையம் எம்ஜிஆர் நகரில் புதிய...