திருவள்ளூர் அருகே ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

திருவள்ளூர், மே 21: திருவள்ளூர் அடுத்த வெள்ளியூர், விளாப்பாக்கம் பகுதியில் சிலர் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து பயிரிட்டு வருவதாக மாவட்ட கலெக்டருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்பேரில், கோட்டாட்சியர் ரமேஷ் மேற்பார்வையில் தாசில்தார் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் விளாப்பாக்கம் ஏரிக்கு சென்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதா என ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஏரியில் 15 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்து நெல் பயிரிடப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்து பயிரிடப்பட்ட நெற்பயிர்களை அகற்றி ஆக்கிரமிப்பு அரசு நிலத்தை மீட்டனர்.

Related Stories: