சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவேன்: சிஎஸ்கே கேப்டன் தோனி

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவேன் என சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியுள்ளார். மும்பை பிரபோர்னே மைதானத்தில் இன்று நடைபெறும் 68-வது ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகின்றன. பிளே ஆப் வாய்ப்பில் இருந்து வெளியேறினாலும் ஆறுதல் வெற்றிக்காக சென்னை அணி களமிறங்குகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

டாஸ் வென்ற பிறகு கேப்டன் தோனி கூறுகையில்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவேன், சென்னைக்கு நன்றி சொல்லாமல் இருப்பது நியாயமல்ல, ரசிகர்களை ஏமாற்றுவது சரியாகாது என அவர் கூறியுள்ளார்.  

மும்பையில் எனக்கு ஒரு அணியாகவும் தனி மனிதனாகவும் நிறைய அன்பும் பாசமும் கிடைத்தது. ஆனாலும் சிஎஸ்கே ரசிகர்களிடம் நன்றி சொல்லாமல் இருக்க முடியாது. அடுத்த ஆண்டு வெவ்வேறு இடங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும். அப்போது ஒவ்வொரு மைதானத்திற்கும் சென்று அனைவருக்கும் நன்றி தெரிவிக்கலாம்.

இது எனது கடைசி ஆண்டாக இருக்குமா இல்லையா என்பது ஒரு பெரிய கேள்வியாக உள்ளது. ஏனென்றால் இன்னும் ஒரு வருடத்திற்கு பின்னர் நடக்கப்போவது பற்றி இப்போதே கணிக்க முடியாது எனவும் ஆனால் நிச்சயமாக நான் அடுத்த ஆண்டு இன்னும் வலுவாக திரும்ப வருவதற்கு கடினமாக உழைக்கிறேன் எனவும் சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியுள்ளார்.

Related Stories: