ஆலங்காயம் அருகே 20 நாட்களாக திரிந்த ஒற்றை யானை காட்டிற்குள் விரட்டியடிப்பு

லங்காயம்: திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த காவலூர் மற்றும் நாயக்கனூர் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து கடந்த 20 நாட்களுக்கு முன் ஒற்றை யானை வெளியேறியது. இந்த யானை அவ்வப்போது விளைநிலங்களில் இறங்கி செல்வதால் அங்கிருந்த விவசாய  பயிர்கள் தொடர்ந்து சேதமாகி வந்தது. பயிர் சேதமானதால் வேதனை அடைந்த விவசாயிகள் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் ஆலங்காயம் வனச்சரக அலுவலர் சோமசுந்தரம் தலைமையில் 12க்கும் மேற்பட்ட வனத்துறையினர் நேற்று முதல் 4 குழுக்களாகப் பிரிந்து, நாயக்கனூர், கிருஷ்ணாபுரம் பகுதிகளுக்கு சென்று  ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர் முயற்சியால் இன்று அதிகாலை ஆலங்காயம் மலை ரெட்டியூர் காப்புக்காட்டிற்குள் யானையை விரட்டியடித்தனர். விவசாய நிலத்தில் திரிந்த யானை விரட்டியடிக்கப்பட்டதால் விவசாயிகள் நிம்மதியடைந்தனர்.

Related Stories: