2021-22ம் நிதியாண்டில் ஒன்றிய அரசுக்கு ரூ.30 ஆயிரத்து 307 கோடியை ஈவுத் தொகையாக வழங்க ரிசர்வ் வங்கி முடிவு

டெல்லி: 2021-22ம் நிதியாண்டில் ஒன்றிய அரசுக்கு ரூ.30 ஆயிரத்து 307 கோடியை ஈவுத் தொகையாக வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு ஈவுத் தொகையை வழங்குவது நடைமுறையான ஒன்று ஆகும். இதேபோல் 2020-2021 ம் நிதியாண்டிற்கான ஈவுத்தொகையாக சுமார் ரூ. 99 ஆயிரத்து 122 கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிமாற்றம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. முந்தைய ஆண்டை காட்டிலும் தற்போது ஈவுத்தொகை குறைவு என்றாலும் இந்த முக்கிய நடவடிக்கையானது பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் மத்திய அரசுக்கு மிகப்பெரும் பலமாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஈவுத்தொகை என்பது, ரிசர்வ் வங்கி சந்தை நடவடிக்கைகள், முதலீடுகள், பணம் அச்சிடுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதிலிருந்து கிடைக்கிற உபரித்தொகை அல்லது லாபம் இவற்றிலிருந்து மத்திய அரசுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை ஈவுத்தொகையாக ரிசர்வ் வங்கி வழங்கும். அதே போல் இந்த ஆண்டும் ஈவுத் தொகையாக (Dividend amount) ரூ. 30 ஆயிரத்து 307 கோடியை ஒன்றிய அரசுக்கு வழங்கியுள்ளது.

Related Stories: