சென்னை கொடுங்கையூர் குப்பை மேட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள்

சென்னை: சென்னை கொடுங்கையூர் குப்பை மேட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காட்சியளிக்கிறது. சென்னை கொடுங்கையூர் குப்பை மேட்டில் வட சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து லாரிகள் மூலம் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுகிறது. மேலும் கொடுங்கையூர், கொருக்குப்பேட்டை, எழில்நகர், தண்டையார்பேட்டை முழுவதும் புகைமூட்டமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே தீயணைப்பு படைவீரர்கள் அப்பகுதிக்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சமூக ஆர்வலர்கள் பலர் கூறுகையில் குப்பைக்கிடங்கில் அவ்வப்போது தீப்பற்றி எரிவதாகவும், குப்பைகள் அதிகரிப்பால் ஊழியர்கள் குப்பைகளை தீ வைத்து கொளுத்திவிடுகின்றனர்களா அல்லது சமூக விரோதிகள் யாரேனும் தீ வைத்து கொளுத்திவிடுகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் இதனை மாநகராட்சி அதிகாரிகள் கருத்தில் கொண்டு இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடப்பதை தவிர்க்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: