சென்னை: டிக்கெட் பரிசோதகர் தள்ளிவிட்டதால் காயமடைந்தவருக்கு தெற்கு ரயில்வே 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற உத்தரவை மாநில நுகர்வோர் ஆணையம் உறுதி செய்துள்ளது. விருதுநகர் ராஜபாளையத்தைச் சேர்ந்த மாரியப்பன், 1998-ம் ஆண்டு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு செல்ல முன்பதிவில்லாத டிக்கெட் எடுத்துள்ளார். இந்தநிலையில் முன்பதிவில்லாத பெட்டியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் முன்பதிவு பெட்டியில் பயணிக்க டிக்கெட் பரிசோதகரிடம் அனுமதி கோரி உள்ளார். ஆனால் அதனை ஏற்க மறுத்த டிக்கெட் பரிசோதகர், மாரியப்பனை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளார்.