×

இலங்கை கடற்படை பிடித்து வைத்த படகுகளை மீட்டு தாருங்கள்!: ராமேஸ்வரத்தில் பல்வேறு பகுதி மீனவர்கள் உண்ணாவிரதம்..!!

ராமநாதபுரம்: இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை மீட்டு தரக்கோரி ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். கடந்த 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை ராமேஸ்வரம், மண்டபம், ஜகதாபட்டினம், கோட்டைபட்டினம், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளை சேர்ந்த மீனவர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. இந்த விசைப்படகு மற்றும் நாட்டு படகுகளை மீட்டுத்தரகோரி மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் டீசல் விலையை குறைக்க கோரிக்கை விடுத்தார்கள்.

கடந்த 75 ஆண்டுகளாக மீனவர்களுக்காக அரசியல் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதனிடையே தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படை பிரச்னை உள்ளிட்ட பல்வேறு மீனவ பிரச்சனைகளை அரசிடம் கொண்டுசேர்க்க அரசியல் பிரதிநிதித்துவம் தேவை என்றும் போராட்டத்தில் வலியுறுத்தினார்கள். இதற்கு மீனவர்களுக்கு என தனியாக ஒரு நியமன மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அரசியல் கட்சிகள் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.


Tags : Sri Lankan Navy ,Rameswaram , Sri Lanka Navy, boat, Rameswaram, fishermen fast
× RELATED இலங்கை கடற்படையை கண்டித்து...