நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த ஸ்ரீநகர் காவல் நிலையம்: போலீசார் விசாரணை

ஸ்ரீநகர்: கோதிபாக் காவல் நிலையத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஸ்ரீநகரின் ரெசிடென்சி சாலையில் கோதிபாக் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலைய வளாகத்தில் ஏராளமான போலீஸ் அலுவலகங்கள் உள்ளன. குறிப்பாக எஸ்பி, டிஎஸ்பி, கோதிபாக் காவல் நிலையம் ஆகியன உள்ளன.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு கோதிபாக் காவல் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதனால் காவல் நிலையம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. தீ விபத்திற்கான காரணங்கள் தெரியவில்லை. தகவலறிந்த தீயணைப்பு மீட்புக் குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை மேலும் பரவாமல் கட்டுக் கொண்டு வந்தனர். தீவிரவாதிகளின் சதி வேலையா? அல்லது வேறு காரணங்களா என்பது குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: