வியாசர்பாடி அருகே ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பை தடுக்க முயன்ற மாணவன் கீழே விழுந்து பலி..!!

சென்னை: அரக்கோணம் அருகே செல்போன் பறிப்பை தடுக்க முயன்ற போது ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்த கல்லூரி மாணவர் உயிரிழந்தார். வியாசர்பாடி - பெரம்பூர் இடையே ஓடும் ரயிலில் இருந்து கல்லூரி மாணவர் கார்த்திக் கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். போலீஸ் விசாரணையில், ஓடும் ரயிலில் கதவோரம் நின்றிருந்த போது, 2 பேர் செல்போனை பறிக்க முயன்றதும், அப்போது கீழே விழுந்து மாணவன் படுகாயம் அடைந்ததும் தெரியவந்துள்ளது. மாணவர் இறப்பதால் ஆழ்ந்து துக்கத்தில் உள்ள உறவினர்கள், இது போன்று மற்றொரு இழப்பு ஏற்படாமல் இருக்க, செல்போன் வழிப்பறியை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: