×

நாமக்கலில் 5 கிலோ மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்கள் பறிமுதல் எதிரொலி... தேர்வு பணியில் இருந்த 11 கண்காணிப்பாளர்கள் சஸ்பெண்ட்!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 5 கிலோ மைக்ரோ ஜெராக்ஸ் பிட் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் 11 பேர் தேர்வு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி அரசு பொதுத்தேர்வுகள் கடந்த இரு வாரத்துக்கு முன் துவங்கி நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 80க்கும் மேற்பட்ட மையங்களில் பொதுத்தேர்வு நடக்கிறது. இந்த நிலையில் கடந்த 17ம் தேதி  பிளஸ் 2 மாணவர்களுக்கு கணிதத்தேர்வு நடைபெற்றது. அப்போது, கொல்லிமலை, குமாரபாளையம், பள்ளிபாளையம் உள்ளிட்ட தேர்வு மையங்களில் பறக்கும் படையினர் மாணவ, மாணவியர்களிடம் இருந்து சுமார் 5 கிலோ மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்களை பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே மேலும் சில மையங்களில் மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பரை பார்த்து தேர்வு எழுதுவது தெரியவந்தது. இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பறிமுதல் செய்யப்பட்ட பேப்பர்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இந்த நிலையில் தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் 11 பேரை தேர்வு பணியில் இருந்து விடுவித்து அரசு தேர்வுகள் இயக்குனர் சேது வர்மா உத்தரவிட்டுள்ளார்.தொடர்ந்து மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடாமல் இருப்பதை  தடுப்பதற்காக கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

Tags : Namakkal , Namakkal, Micro, Xerox, Bit Papers, Seizure
× RELATED பொதுக்கூட்டம் நடத்த 48 மணி நேரத்துக்கு முன் அனுமதி அவசியம்