×

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக மோசடி!: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு தொடர்புடைய 15 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை..!!

பாட்னா: ஊழல் வழக்கு தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். லாலு பிரசாத் யாதவ், அவரது மகன் மீது சமீபத்தில் தொடரப்பட்ட ஊழல் வழக்கு தொடர்பாக சோதனை நடத்தி வருகின்றனர். ராஷ்ட்ரிய ஜனதா தள நிறுவனரான லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகள் மிசா பாரதிக்கு தொடர்புடைய 15 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. லாலு பிரசாத் யாதவ் ரயில்வே துறை அமைச்சராக இருந்த போது நடைபெற்ற பணிகளுக்கான தேர்வில் வேலை வாங்கி தருவதாக கூறி முறைகேடு நடந்திருப்பதாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. ரயில்வே வேலைகளை வழங்குவதற்காக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் நிலம் மற்றும் சொத்துக்களை லஞ்சமாக பெற்றதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

அதன் அடிப்படையில் தற்போது இந்த சோதனை நடைபெற்று வருகிறது. பீகார் தலைநகர் பாட்னா உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுவதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பாட்னாவில் மட்டும் 4 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. மாட்டுத்தீவன ஊழல் வழக்குகளை சந்தித்த லாலு பிரசாத் ஏற்கனவே சிறை தண்டனை பெற்றவர் என்பது நினைவுகூரத்தக்கது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ அதிகாரி ஒருவர், லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ​​சில நபர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி நிலம் கையகப்படுத்தப்பட்டது தொடர்பான புகார் எழுந்துள்ளது. இந்த புகாரின் ஆரம்பகட்ட விசாரணை தற்போது எஃப்.ஐ.ஆராக மாற்றப்பட்டுள்ளதாக கூறினார்.


Tags : CBI ,Bihar ,Chief Minister ,Lalu Prasad Yadav , Railways, Bihar, Lalu Prasad Yadav, CBI check
× RELATED டெல்லி மதுபான கொள்கை வழக்கு முதல்வர்...