×

வியாபாரிகளிடம் மட்டும் நெல் கொள்முதல் செய்வதாக புகார்: செய்யூர் எம்எல்ஏ திடீர் ஆய்வு

செய்யூர்: கருப்பூர் கிராமம் நெல் கொள்முதல் நிலையத்தில், வியாபாரிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை மட்டும் அதிகாரிகள் கொள்முதல் செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு, அங்கு சென்று நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

செய்யூர் வட்டம் லத்தூர் ஒன்றியம் கருப்பூர் கிராமத்தில், அரசு நேரடி கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு கருப்பூர், பொன்னமை, நீலமங்கலம், சாத்தமங்கலம், நெல்வாய் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமகளில் இருந்து விவசாயிகள், தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்கின்றனர். தற்போது வரை இங்கு 14 ஆயிரம் நெல் மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகளை மட்டும் அதிகாரிகள் கொள்முதல் செய்வதாகவும், உள்ளூர் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதில் மெத்தனம் காட்டுவதாக, கருப்பூர் கிராம மக்கள், செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபுவிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் எம்எல்ஏ பனையூர் பாபு, நெல் கொள்முதல் நிலையத்துக்கு நேற்று நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர், கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளின் கணக்கினை சரிபார்த்தார். பின்னர், புகார் மனு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்து, இனி இதுபோன்ற தவறுகள் நடக்காத வகையில் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.

Tags : Seiyur ,MLA , Complaint of buying paddy only from traders: Seyyur MLA raid
× RELATED செய்யூர் அருகே பரபரப்பு வெட்டு காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு