அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம்: செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: தமிழகத்தின் எந்த மருத்துவமனையை  நாடினாலும்  நோயாளிகளின் உடல் நலன் குறித்த விவரங்கள் இணைய வழியே  பதிவேற்றப்பட்டிருக்கும். எங்கு வேண்டுமானாலும்  சிகிச்சையைத் தொடர முடியும். இத்திட்டத்தை ஆக்கப்பூர்வமாக  செயல்படுத்தும் நோக்கில் ஆஸ்திரேலிய அரசு அதிகாரிகளுடன் தமிழக மக்கள்  நல்வாழ்வுத் துறையினர் நேற்று ஆலோசனை நடத்தினர் என்று மருத்துவத்துறை ெசயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

இக்கூட்டத்தில் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய துணைத் தூதர் சாரா கிர்லியூ, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயந்தி, ஆஸ்திரேலிய அரசு அலுவலர்கள் அப்துல் ஏக்ராம் ஆகியோர் கலந்து கொண்டனர். நோயாளிகள் இணையப் பதிவேடு முறையை விரிவாக அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு நோயாளி தமிழகத்தின் எந்த மருத்துவமனையை நாடினாலும் அவரது உடல் நலன் குறித்த விவரங்கள் இணைய வழியே பதிவேற்றப்பட்டிருக்கும். அதன் வாயிலாக அவர் எங்கு வேண்டுமானாலும் சிகிச்சையைத் தொடர முடியும். இத்திட்டத்தை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தும் நோக்கில் ஆஸ்திரேலிய அரசு அதிகாரிகளுடன் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறையினர் கலந்துரையாடினர்.

Related Stories: