நீர்மட்டம் 111.50 அடியாக உயர்வு மேட்டூர் அணை ஜூன் 12ல் திறக்க வாய்ப்பு: ெடல்டா விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் 30,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, கர்நாடகாவில் மழை சற்று குறைந்ததால் நேற்று காலை 20,000 கனஅடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் மாலை 20,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 29,072 கனஅடியாக அதிகரித்தது. குடிநீர் தேவைக்கு 1,500 கனஅடி திறக்கப்படுகிறது. இதனால் நேற்று முன்தினம் காலை 109.45 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று நண்பகல் 111.50 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் நீர்மட்டம் 2 அடி வரை உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 79.98 டிஎம்சியாக உள்ளது.

நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், ஒரு வாரத்தில் அணை முழு கொள்ளளவை(120 அடி) எட்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால், நடப்பாண்டில் குறித்த நாளான ஜூன் 12ம் தேதி, மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: