கேன்ஸ் திரைப்பட விழாவில் சர்வதேச திரைப்படத் தயாரிப்பாளர்களை சந்திக்கிறார் மத்திய இணையமைச்சர் எல். முருகன்

புதுடெல்லி: பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக  ஒன்றிய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல். முருகன் நாளை டெல்லியில் இருந்து புறப்படுகிறார். கேன்ஸ் திரைப்பட விழாவில் 24ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.  இந்திய அரங்கை பார்வையிடுகிறார். இந்தியாவுடன் இணைந்து வெளிநாட்டுப் படங்களை கூட்டாக தயாரிப்பதற்கு ரூ. 2 கோடி வரையிலும், வெளிநாட்டுப் படங்களை இந்தியாவில் படம் பிடிக்க ரூ.2.5 கோடி வரையிலும் மத்திய அரசு ஊக்கத்தொகை அளிக்கிறது. இந்த அரிய வாய்ப்பை சர்வதேச திரைப்படத் தயாரிப்பாளர்கள் பயன்படுத்திக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில்,அவர்களை மத்திய இணையமைச்சர் முருகன் சந்தித்து பேசவுள்ளார்.

Related Stories: