×

தமிழகத்தில் பணவீக்கம் 5.37% ஆக குறைந்தது: முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி

சென்னை: இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் பணவீக்கம் மிகக் குறைந்த அளவான 5.37 விழுக்காடாக உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவு:
இந்தியா முழுமைக்குமான ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்கத்தின் தேசிய சராசரி விகிதமானது 6.2 விழுக்காட்டிலிருந்து 7.79 விழுக்காடாக உயர்ந்துள்ளது. பல மாநிலங்களில் இது 9 விழுக்காட்டை தாண்டி மக்களை வாட்டி வரும் நிலையில், நம் தமிழ்நாட்டில் இது மிகக் குறைந்த அளவில் 5.37 விழுக்காடாக மட்டுமே உள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்ததைவிட குறைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

உணவுப் பொருட்களின் விலைவாசி குறைந்திருப்பதுடன் - மகளிருக்கு கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் வழங்கியதன் மூலம் குறைந்த போக்குவரத்துச் செலவு என பல்வேறு நலத்திட்டங்களை உள்ளடக்கிய திராவிட மாடல் நல்லாட்சியின் சாதனை இது. இச்சாதனை தொடரும்.

Tags : Tamil Nadu ,Chief Minister ,MK Stalin , Tamil Nadu, Inflation, Chief Minister MK Stalin,
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...