தாய்லாந்து ஓபன் பேட்மின்டன்: காலிறுதிக்கு முன்னேறினார் சிந்து

பாங்காக்: தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றார். 2வது சுற்றில் தென் கொரியாவின் சிம் யூ ஜின்னுடன் நேற்று மோதிய சிந்து 21-16, 21-13 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 37 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. அடுத்து காலிறுதியில் ஜப்பான் நட்சத்திரம் அகானே யாமகுச்சியின் சவாலை சிந்து சந்திக்கிறார். இந்த தொடரில் களமிறங்கிய சக இந்திய வீரர், வீராங்கனைகள் ஏமாற்றத்துடன் வெளியேறிய நிலையில், சிந்து மட்டுமே பதக்க நம்பிக்கையை தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: