16 நகராட்சி ஆணையர்கள் இட மாற்றம்

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி ஆணையர் முருகேசன், திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலை ஆணையர் பார்த்த சாரதி ராஜபாளையத்துக்கும், அங்கு பணிபுரிந்த சுந்தரம்பாள் கிருஷ்ணகிரிக்கும், வால்பாறை ஆணையர் சுரேஷ்குமார், திருவாரூக்கும், மயிலாடுதுறை ஆணையர் பாலு, வால்பாறைக்கும், திருவள்ளூர் ஆணையர் ரவிச்சந்திரன் சங்கரன்கோவிலுக்கும், காத்திருப்பு பட்டியலில் இருந்த சாந்தி, தேவகோட்டைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், செங்கல்பட்டு ஆணையர் ராஜலட்சுமி, திருவள்ளூருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆணையர் மல்லிகா செங்கல்பட்டுக்கும், குளச்சல் ஆணையர் ராஜமாணிக்கம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கும், தேவகோட்டை ஆணையர் அசோக்குமார் அருப்புக்கோட்ைடக்கும், அங்கு பணிபுரிந்த பாஸ்கரன் சிவகங்கைக்கும், திருநின்றவூர் ஆணையர் கணேசன், சின்னமனூருக்கும், கூடலூர் ஆணையர் ராஜேஸ்வரன் அம்பாசமுத்திரதுக்கும், பெரம்பலூர் ஆணையர் குமரி மன்னன் வாலாஜாபேட்டைக்கும், அம்பாசமுத்திரம் ஆணையர் பார்கவி பெரம்பலூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

Related Stories: